திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 36
- பால் – அறத்துப்பால்
- இயல் – பாயிரவியல்
- அதிகாரம் – அறன் வலியுறுத்தல்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
மு. வரதராசன் உரை : இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
சாலமன் பாப்பையா உரை : முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.
கலைஞர் உரை : பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Paayiraviyal ( Prologue )
- Adikaram : Aran Valiyuruththal ( Assertion of the Strength of Virtue )
Tanglish :
Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu
Pondrungaal Pondraath Thunai
Couplet :
Do deeds of virtue now Say not, ‘To-morrow we’ll be wise’;Thus, when thou diest, shalt thou find a help that never dies
Translation :
Do good enow; defer it not A deathless aid in death if sought
Explanation :
Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend