Skip to content
kaapiyam-logo

தமிழ் வலைத்தளம்

Menu
  • திருக்குறள்
  • உணவே மருந்து
  • சமையல்
  • அழகு குறிப்புகள்
Menu
Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku Nalla Pataaa Parai | அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு | Kural No - 1115 | Thirukkural Meaning & Definition in Tamil and English
View   Download  

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை. | குறள் எண் – 1115

Updated on December 14, 2020January 4, 2023 by admin

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 1115
  • பால் – காமத்துப்பால்
  • இயல் – களவியல்
  • அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு

நல்ல படாஅ பறை.

மு. வரதராசன் உரை : அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

சாலமன் பாப்பையா உரை : என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

கலைஞர் உரை : அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Kaamaththuppaal ( Love )
  • Iyal : Kalaviyal ( The Pre-marital love )
  • Adikaram : Nalampunaindhuraiththal ( The Praise of her Beauty )

Tanglish :

Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku

Nalla Pataaa Parai

Couplet :

The flowers of the sensitive plant as a girdle around her she placed;The stems she forgot to nip off; they ‘ll weigh down the delicate waist

Translation :

Anicha flower with stem she wears To her breaking waist sad-drum-blares!

Explanation :

No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem

Share this:

  • Facebook
  • WhatsApp
  • Telegram
  • Twitter

மேலே உள்ள திருக்குறள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்... Cancel reply

"காப்பியம்" - தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம்.இங்கு தொழில்நுட்பம், அழகு குறிப்புகள், அரசியல், விளையாட்டு, சமையல், போன்ற அனைத்து துறைகளிலும் உள்ள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து பதிவுகளும் தமிழிலேயே இயற்றப்பட்டுள்ளன.
வாழ்க தமிழ்!!!!

© 2023 | Powered by Superbs Personal Blog theme