திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 175
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – வெஃகாமை
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
மு. வரதராசன் உரை : யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?
சாலமன் பாப்பையா உரை : பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?
கலைஞர் உரை : யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Veqkaamai ( Not Coveting )
Tanglish :
Aqki Akandra Arivennaam Yaarmaattum
Veqki Veriya Seyin
Couplet :
What gain, though lore refined of amplest reach he learn,His acts towards all mankind if covetous desire to folly turn
Translation :
What is one’s subtle wisdom worth If it deals ill with all on earth
Explanation :
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?