Atram Maraiththalo Pullarivu Thamvayin Kutram Maraiyaa Vazhi | அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் | Kural No - 846 | Thirukkural Meaning & Definition in Tamil and English

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. | குறள் எண் – 846

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 846
  • பால் – பொருட்பால்
  • இயல் – நட்பியல்
  • அதிகாரம் – புல்லறிவாண்மை

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி.

மு. வரதராசன் உரை : தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை : தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.

கலைஞர் உரை : நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Porutpaal ( Wealth )
  • Iyal : Natpiyal ( Friendship )
  • Adikaram : Pullarivaanmai ( Ignorance )

Tanglish :

Atram Maraiththalo Pullarivu Thamvayin

Kutram Maraiyaa Vazhi

Couplet :

Fools are they who their nakedness conceal,And yet their faults unveiled reveal

Translation :

Fools their nakedness conceal And yet their glaring faults reveal

Explanation :

Even to cover one’s nakedness would be folly, if (one’s) faults were not covered (by forsaking them)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *