திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 165
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – அழுக்காறாமை
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
மு. வரதராசன் உரை : பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
சாலமன் பாப்பையா உரை : பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்
கலைஞர் உரை : பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Azhukkaaraamai ( Not Envying )
Tanglish :
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar
Vazhukka�yum Keteen Padhu
Couplet :
Envy they have within! Enough to seat their fate!Though foemen fail, envy can ruin consummate
Translation :
Man shall be wrecked by envy’s whim Even if enemies spare him
Explanation :
To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction