திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 771
- பால் – பொருட்பால்
- இயல் – படையில்
- அதிகாரம் – படைச் செருக்கு
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
மு. வரதராசன் உரை : பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.
சாலமன் பாப்பையா உரை : பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.
கலைஞர் உரை : போர்களத்து வீரன் ஒருவன், “பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Padaiyil ( The Excellence of an Army )
- Adikaram : Pataichcherukku ( Military Spirit )
Tanglish :
Ennaimun Nillanmin Thevvir Palarennai
Munnindru Kalnin Ravar
Couplet :
Ye foes stand not before my lord for many a oneWho did my lord withstand, now stands in stone
Translation :
Stand not before my chief, O foes! Many who stood, in stones repose
Explanation :
O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues