திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1042
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – நல்குரவு
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
மு. வரதராசன் உரை : வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
சாலமன் பாப்பையா உரை : இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
கலைஞர் உரை : பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Nalkuravu ( Poverty )
Tanglish :
Inmai Enavoru Paavi Marumaiyum
Immaiyum Indri Varum
Couplet :
Malefactor matchless! poverty destroysThis world’s and the next world’s joys
Translation :
The sinner Want is enemy dire Of joys of earth and heaven there
Explanation :
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)