திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 988
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – சான்றாண்மை
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.
மு. வரதராசன் உரை : சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
சாலமன் பாப்பையா உரை : சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
கலைஞர் உரை : சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Saandraanmai ( Perfectness )
Tanglish :
Inmai Oruvarku Ilivandru Saalpennum
Thinmai Un Taakap Perin
Couplet :
To soul with perfect virtue’s strength endued,Brings no disgrace the lack of every earthly good
Translation :
No shame there is in poverty To one strong in good quality
Explanation :
Poverty is no disgrace to one who abounds in good qualities