திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1064
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – இரவச்சம்
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
மு. வரதராசன் உரை : வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை : ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
கலைஞர் உரை : வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Iravachcham ( The Dread of Mendicancy )
Tanglish :
Itamellaam Kollaath Thakaiththe Itamillaak
Kaalum Iravollaach Chaalpu
Couplet :
Who ne’er consent to beg in utmost need, their worthHas excellence of greatness that transcends the earth
Translation :
All space is small before the great Who beg not e’en in want acute
Explanation :
Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution