திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 102
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
மு. வரதராசன் உரை : உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை : நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்
கலைஞர் உரை : தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Seynnandri Aridhal ( Gratitude )
Tanglish :
Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu
Couplet :
A timely benefit, -though thing of little worth,The gift itself, -in excellence transcends the earth
Translation :
A help rendered in hour of need Though small is greater than the world
Explanation :
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world