திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 930
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – கள்ளுண்ணாமை
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
மு. வரதராசன் உரை : ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.
சாலமன் பாப்பையா உரை : போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?
கலைஞர் உரை : ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Kallunnaamai ( Not Drinking Palm-Wine )
Tanglish :
Kallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal
Ullaankol Untadhan Sorvu
Couplet :
When one, in sober interval, a drunken man espies,Does he not think, ‘Such is my folly in my revelries’
Translation :
The sober seeing the drunkard’s plight On selves can’t they feel same effect?
Explanation :
When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink