திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1137
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – நாணுத் துறவுரைத்தல்
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
மு. வரதராசன் உரை : கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
சாலமன் பாப்பையா உரை : அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.
கலைஞர் உரை : கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Naanuththuravuraiththal ( The Abandonment of Reserve )
Tanglish :
Katalanna Kaamam Uzhandhum Mataleraap
Pennin Perundhakka Thil
Couplet :
There’s nought of greater worth than woman’s long-enduring soul,Who, vexed by love like ocean waves, climbs not the ‘horse of palm’
Translation :
Her sea-like lust seeks not Madal! Serene is woman’s self control
Explanation :
There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust