திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 260
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – புலால் மறுத்தல்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
மு. வரதராசன் உரை : ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
சாலமன் பாப்பையா உரை : எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
கலைஞர் உரை : புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Pulaanmaruththal ( Abstinence from Flesh )
Tanglish :
Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi
Ellaa Uyirun Thozhum
Couplet :
Who slays nought,- flesh rejects- his feet beforeAll living things with clasped hands adore
Translation :
All lives shall lift their palms to him Who eats not flesh nor kills with whim
Explanation :
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh