திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 965
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – மானம்
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
மு. வரதராசன் உரை : மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
சாலமன் பாப்பையா உரை : நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.
கலைஞர் உரை : குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Maanam ( Honour )
Tanglish :
Kundrin Anaiyaarum Kundruvar Kundruva
Kundri Anaiya Seyin
Couplet :
If meanness, slight as ‘abrus’ grain, by men be wrought,Though like a hill their high estate, they sink to nought
Translation :
Even hill-like men will sink to nought With abrus-grain-like small default
Explanation :
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing