திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 957
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – குடிமை
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதக்கண் மறுப்போல் உயர்ந்து.
மு. வரதராசன் உரை : உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை : நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.
கலைஞர் உரை : பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Kutimai ( Nobility )
Tanglish :
Kutippirandhaar Kanvilangum Kutram Visumpin
Madhikkan Maruppol Uyarndhu
Couplet :
The faults of men of noble race are seen by every eye,As spots on her bright orb that walks sublime the evening sky
Translation :
The faults of nobly-born are seen Like on the sky the spots of moon
Explanation :
As spots on her bright orb that walks sublime the evening sky