திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 434
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – குற்றங்கடிதல்
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
மு. வரதராசன் உரை : குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.
கலைஞர் உரை : குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Kutrangatidhal ( The Correction of Faults )
Tanglish :
Kutrame Kaakka Porulaakak Kutrame
Atran Tharooum Pakai
Couplet :
Freedom from faults is wealth; watch heedfully’Gainst these, for fault is fatal enmity
Translation :
Watch like treasure freedom from fault Our fatal foe is that default
Explanation :
Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy