திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1238
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – உறுப்புநலன் அழிதல்
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
மு. வரதராசன் உரை : தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
சாலமன் பாப்பையா உரை : முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!
கலைஞர் உரை : இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Uruppunalanazhidhal ( Wasting Away )
Tanglish :
Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu
Paindhotip Pedhai Nudhal
Couplet :
One day the fervent pressure of embracing arms I checked,Grew wan the forehead of the maid with golden armlet decked
Translation :
The front of this fair one O paled As my clasping arms loosed their hold
Explanation :
When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow