திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1045
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – நல்குரவு
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
மு. வரதராசன் உரை : வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
சாலமன் பாப்பையா உரை : இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.
கலைஞர் உரை : வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Nalkuravu ( Poverty )
Tanglish :
Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith
Thunpangal Sendru Patum
Couplet :
From poverty, that grievous woe,Attendant sorrows plenteous grow
Translation :
The pest of wanton poverty Brings a train of misery
Explanation :
The misery of poverty brings in its train many (more) miseries