திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 171
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
மு. வரதராசன் உரை : நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை : பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
கலைஞர் உரை : மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Veqkaamai ( Not Coveting )
Tanglish :
Natuvindri Nanporul Veqkin Kutipondrik
Kutramum Aange Tharum
Couplet :
With soul unjust to covet others’ well-earned store,Brings ruin to the home, to evil opes the door
Translation :
Who covets others’ honest wealth That greed ruins his house forthwith
Explanation :
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred