திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 124
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – அடக்கம் உடைமை
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
மு. வரதராசன் உரை : தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை : தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
கலைஞர் உரை : உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Atakkamutaimai ( The Possession of Self-restraint )
Tanglish :
Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu
Couplet :
In his station, all unswerving, if man self subdue,Greater he than mountain proudly rising to the view
Translation :
Firmly fixed in self serene The sage looks grander than mountain
Explanation :
More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself