திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1304
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – புலவி
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
மு. வரதராசன் உரை : பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
சாலமன் பாப்பையா உரை : தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.
கலைஞர் உரை : ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Pulavi ( Pouting )
Tanglish :
Ooti Yavarai Unaraamai Vaatiya
Valli Mudhalarin Thatru
Couplet :
To use no kind conciliating art when lover grieves,Is cutting out the root of tender winding plant that droops
Translation :
To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself
Explanation :
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root