திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 823
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – கூடா நட்பு
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
மு. வரதராசன் உரை : பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை : மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.
கலைஞர் உரை : அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Kootaanatpu ( Unreal Friendship )
Tanglish :
Palanalla Katrak Kataiththu Mananallar
Aakudhal Maanaark Karidhu
Couplet :
To heartfelt goodness men ignoble hardly may attain,Although abundant stores of goodly lore they gain
Translation :
They may be vast in good studies But heartfelt-love is hard for foes
Explanation :
Though (one’s) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart