திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1223
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – பொழுதுகண்டு இரங்கல்
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.
மு. வரதராசன் உரை : பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
சாலமன் பாப்பையா உரை : அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.
கலைஞர் உரை : பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Pozhudhukantirangal ( Lamentations at Eventide )
Tanglish :
Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith
Thunpam Valara Varum
Couplet :
With buds of chilly dew wan evening’s shade enclose;My anguish buds space and all my sorrow grows
Translation :
Wet eve came pale and trembling then Now it makes bold with growing pain
Explanation :
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow