திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 996
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – பண்புடைமை
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
மு. வரதராசன் உரை : பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
சாலமன் பாப்பையா உரை : பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.
கலைஞர் உரை : உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Panputaimai ( Courtesy )
Tanglish :
Panputaiyaarp Pattuntu Ulakam Adhuindrel
Manpukku Maaivadhu Man
Couplet :
The world abides; for ‘worthy’ men its weight sustainWere it not so, ‘twould fall to dust again
Translation :
The world rests with the mannered best Or it crumbles and falls to dust
Explanation :
The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish