திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1283
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – புணர்ச்சி விதும்பல்
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
மு. வரதராசன் உரை : என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
சாலமன் பாப்பையா உரை : என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
கலைஞர் உரை : என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Punarchchividhumpal ( Desire for Reunion )
Tanglish :
Penaadhu Petpave Seyyinum Konkanaik
Kaanaa Thamaiyala Kan
Couplet :
Although his will his only law, he lightly value me,My heart knows no repose unless my lord I see
Translation :
Though slighting me he acts his will My restless eyes would see him still
Explanation :
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him