திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1280
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – குறிப்பறிவுறுத்தல்
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
மு. வரதராசன் உரை : கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை : பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.
கலைஞர் உரை : காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Kuripparivuruththal ( The Reading of the Signs )
Tanglish :
Penninaal Penmai Utaiththenpa Kanninaal
Kaamanoi Solli Iravu
Couplet :
To show by eye the pain of love, and for relief to pray,Is womanhood’s most womanly device, men say
Translation :
To express love-pangs by eyes and pray Is womanhood’s womanly way
Explanation :
To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence