திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 914
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – வரைவின் மகளிர்
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
மு. வரதராசன் உரை : பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை : அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
கலைஞர் உரை : அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Varaivinmakalir ( Wanton Women )
Tanglish :
Porutporulaar Punnalan Thoyaar Arutporul
Aayum Arivi Navar
Couplet :
Their worthless charms, whose only weal is wealth of gain,From touch of these the wise, who seek the wealth of grace, abstain
Translation :
The wise who seek the wealth of grace Look not for harlots’ low embrace
Explanation :
The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches