திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 962
- பால் – பொருட்பால்
- இயல் – குடியியல்
- அதிகாரம் – மானம்
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
மு. வரதராசன் உரை : புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை : புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.
கலைஞர் உரை : புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Kudiyiyal ( Miscellaneous )
- Adikaram : Maanam ( Honour )
Tanglish :
Seerinum Seeralla Seyyaare Seerotu
Peraanmai Ventu Pavar
Couplet :
Who seek with glory to combine honour’s untarnished fame,Do no inglorious deeds, though men accord them glory’s name
Translation :
Who seek honour and manly fame Don’t do mean deeds even for name
Explanation :
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame
Leave a Reply