திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 104
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
மு. வரதராசன் உரை : ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
சாலமன் பாப்பையா உரை : தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்
கலைஞர் உரை : ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Seynnandri Aridhal ( Gratitude )
Tanglish :
Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar
Couplet :
Each benefit to those of actions’ fruit who rightly deem,Though small as millet-seed, as palm-tree vast will seem
Translation :
Help given though millet-small Knowers count its good palm-tree tall
Explanation :
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit