Skip to content
kaapiyam-logo

தமிழ் வலைத்தளம்

Menu
  • திருக்குறள்
  • உணவே மருந்து
  • சமையல்
  • அழகு குறிப்புகள்
Menu
Ullinen Endrenmar Renmarandheer Endrennaip Pullaal Pulaththak Kanal | உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் | Kural No - 1316 | Thirukkural Meaning & Definition in Tamil and English
View   Download  

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். | குறள் எண் – 1316

Updated on December 14, 2020January 4, 2023 by admin

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 1316
  • பால் – காமத்துப்பால்
  • இயல் – கற்பியல்
  • அதிகாரம் – புலவி நுணுக்கம்

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.

மு. வரதராசன் உரை : நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

சாலமன் பாப்பையா உரை : எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.

கலைஞர் உரை : “உன்னை நினைத்தேன்” என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;” அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?” எனக்கேட்டு “ஏன் மறந்தீர்?” என்று அவள் ஊடல் கொண்டாள்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Kaamaththuppaal ( Love )
  • Iyal : Karpiyal ( The Post-marital love )
  • Adikaram : Pulavi Nunukkam ( Feigned Anger )

Tanglish :

Ullinen Endrenmar Renmarandheer Endrennaip

Pullaal Pulaththak Kanal

Couplet :

‘Each day I called to mind your charms,’ ‘O, then, you had forgot,’She cried, and then her opened arms, Forthwith embraced me not

Translation :

I said I thought of you She left Her embrace crying “Oft you forget”

Explanation :

When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike

Share this:

  • Facebook
  • WhatsApp
  • Telegram
  • Twitter

மேலே உள்ள திருக்குறள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்... Cancel reply

"காப்பியம்" - தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம்.இங்கு தொழில்நுட்பம், அழகு குறிப்புகள், அரசியல், விளையாட்டு, சமையல், போன்ற அனைத்து துறைகளிலும் உள்ள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து பதிவுகளும் தமிழிலேயே இயற்றப்பட்டுள்ளன.
வாழ்க தமிழ்!!!!

© 2023 | Powered by Superbs Personal Blog theme