திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1106
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
மு. வரதராசன் உரை : பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.
கலைஞர் உரை : இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Punarchchimakizhdhal ( Rejoicing in the Embrace )
Tanglish :
Urudhoru Uyirdhalirppath Theentalaal Pedhaikku
Amizhdhin Iyandrana Thol
Couplet :
Ambrosia are the simple maiden’s arms; when I attainTheir touch, my withered life puts forth its buds again
Translation :
My simple maid has nectar arms Each embrace brings life-thrilling charms
Explanation :
The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them