திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1122
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – காதற் சிறப்புரைத்தல்
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
மு. வரதராசன் உரை : இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
சாலமன் பாப்பையா உரை : என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.
கலைஞர் உரை : உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Kaadharsirappuraiththal ( Declaration of Love”s special Excellence )
Tanglish :
Utampotu Uyiritai Ennamar Ranna
Matandhaiyotu Emmitai Natpu
Couplet :
Between this maid and me the friendship kindIs as the bonds that soul and body bind
Translation :
Love between me and this lady Is like bond between soul and body
Explanation :
The love between me and this damsel is like the union of body and soul