பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் — தீப்பிணி தீண்டல் அரிது. | குறள் எண் - 227

Thirukkural Verse 227

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

கலைஞர் உரை

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை

மு. வரதராசன் உரை

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: பாத்து ஊண் மரீஇயவனை - எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை. (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை. இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: எப்போதும் பகுத்துப் பிறர்க்குக் கொடுத்து உண்ணப் பழகிய ஒருவனை, பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டுதல் இல்லை.

Paaththoon Mareei Yavanaip Pasiyennum

Theeppini Theental Aridhu

Couplet

Whose soul delights with hungry men to share his meal,The hand of hunger's sickness sore shall never feel

Translation

Who shares his food with those who need Hunger shall not harm his creed

Explanation

The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai

Eydhalin Eydhaamai Nandru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.