அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த — இன்னா உலகம் புகல். | குறள் எண் - 243

Thirukkural Verse 243

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

கலைஞர் உரை

அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்

மு. வரதராசன் உரை

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: இருள் நிறைந்த துன்ப உலகத்தில் சென்று புகுதல் என்பது அருள் நிறைந்த நெஞ்சினையுடையவர்களுக்கு இல்லை.

Arulserndha Nenjinaark Killai Irulserndha

Innaa Ulakam Pukal

Couplet

They in whose breast a 'gracious kindliness' resides,See not the gruesome world, where darkness drear abides

Translation

The hearts of mercy shall not go Into dark worlds of gruesome woe

Explanation

They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness

Comments (1)

Raunak Dar
Raunak Dar
raunak dar verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

Veruvandha Seydhozhukum Vengola Naayin

Oruvandham Ollaik Ketum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.