அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். | குறள் எண் - 1098

asaiyiyarku-untaantor-eeryaan-nokkap-pasaiyinal-paiya-nakum-1098

71

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

"நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்"

கலைஞர் உரை

"யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது."

மு. வரதராசன் உரை

"யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு . (ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள் அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல். "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: என்னை விலக்குகின்ற சொற்களுக்குப் பொறுக்காமல் யான் யாசிப்பது போல நோக்கியபோது அதையறிந்து மனம் நெகிழ்ந்து உள்ளே மகிழ்ந்து நின்றாள். அதனால் அசைந்த சாயலுடைய அவள் காட்டிய அந்த நகைப்பினிடத்தே ஒரு நன்மைக் குறிப்பு உண்டு. "

வி முனுசாமி உரை

Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap
Pasaiyinal Paiya Nakum

Couplet

I gaze, the tender maid relents the while;And, oh the matchless grace of that soft smile

Translation

What a grace the slim maid has! As I look she slightly smiles

Explanation

When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me

71

Write Your Comment