முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். | குறள் எண் - 1238

muyangiya-kaikalai-ookkap-pasandhadhu-paindhotip-pedhai-nudhal-1238

22

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

"இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது"

கலைஞர் உரை

"தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது."

மு. வரதராசன் உரை

"முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!"

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தன்னை இறுகத் தழுவிய கைகளை இவளுக்கு நோகும் என்று கருதி ஒரு போது நான் தளர்த்தினேன், அதனையும் கூடப் பொறுக்கமுடியாமல் பசிய வளையவல்களையணிந்த இப்போதையினுடைய நுதல் பசலை நிறம் அடைந்தது. "

வி முனுசாமி உரை

Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu
Paindhotip Pedhai Nudhal

Couplet

One day the fervent pressure of embracing arms I checked,Grew wan the forehead of the maid with golden armlet decked

Translation

The front of this fair one O paled As my clasping arms loosed their hold

Explanation

When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow

22

Write Your Comment