கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. | குறள் எண் - 402

kallaadhaan-sorkaa-murudhal-mulaiyirantum-illaadhaal-penkaamur-ratru-402

24

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

"கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது"

கலைஞர் உரை

"(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது."

மு. வரதராசன் உரை

"படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும். ('இனைத்தென அறிந்த சினை' (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும். இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: கல்வி இல்லாத ஒருவன் அவையில் ஒன்றைச் சொல்ல ஆசைப்படுதல் முலை இரண்டும் இல்லாத (முகிழ்த்தல் இல்லாத) பெண்ணான ஒருத்தி பெண்ணின்பத்தை விரும்பியது போலாகும். "

வி முனுசாமி உரை

Kallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum
Illaadhaal Penkaamur Ratru

Couplet

Like those who doat on hoyden's undeveloped charms are they,Of learning void, who eagerly their power of words display

Translation

Unlearned man aspiring speech Is breastless lady's love-approach

Explanation

The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood

24

Write Your Comment