பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை — நிச்ச நிரப்புக் கொன் றாங்கு. | குறள் எண் - 532

Thirukkural Verse 532

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.

கலைஞர் உரை

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்

மு. வரதராசன் உரை

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

சாலமன் பாப்பையா உரை

நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், அறிவினை நிச்சநிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல. (நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: மறவியாகின்றது புகழைக்கொல்லும்: நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல. இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.

Pochchaappuk Kollum Pukazhai Arivinai

Nichcha Nirappuk Kon Raangu

Couplet

Perpetual, poverty is death to wisdom of the wise;When man forgets himself his glory dies

Translation

Negligence kills renown just as Ceaseless want wisdom destroys

Explanation

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge

Comments (5)

Ivan Baral
Ivan Baral
ivan baral verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Urvi Bansal
Urvi Bansal
urvi bansal verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Umang Baral
Umang Baral
umang baral verified

4 weeks ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

Nirvaan Barad
Nirvaan Barad
nirvaan barad verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

Pihu Dass
Pihu Dass
pihu dass verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.

Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar

Nilaiyin Izhindhak Katai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.