மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை. | குறள் எண் - 456

manandhooyaark-kechchamnan-raakum-inandhooyaarkku-illainan-raakaa-vinai-456

21

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

"மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்"

கலைஞர் உரை

"மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை."

மு. வரதராசன் உரை

"மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை. (காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.) . "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை. இது மேலதற்குப் பயன் கூறிற்று. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மனம் தூய்மையானவர்களுக்கு எஞ்சி நிற்பதாகிய எச்சம் சிறப்பானதாக அமையும். இனம் தூய்மையானவர்களுக்கு நன்றாகாத செயல் எதுவுமே இல்லை. "

வி முனுசாமி உரை

Manandhooyaark Kechchamnan Raakum Inandhooyaarkku
Illainan Raakaa Vinai

Couplet

From true pure-minded men a virtuous race proceeds;To men of pure companionship belong no evil deeds

Translation

Pure-hearted get good progeny Pure friendship acts with victory

Explanation

To the pure-minded there will be a good posterity By those whose associates are pure, no deeds will be done that are not good

21

Write Your Comment