மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. | குறள் எண் - 454

manaththu-ladhupolak-kaatti-oruvarku-inaththula-thaakum-arivu-454

31

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

"ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்"

கலைஞர் உரை

"ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்."

மு. வரதராசன் உரை

"அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: அறிவு - அவ் விசேட உணர்வு, ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி , இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் . (மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் , பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்' மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப் பின் தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும். "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவனுடைய சிறப்பான உணர்வானது தனது மனத்தில் உள்ளது போலப் புலப்படுத்தி உண்மையில் அவன் சேர்ந்த இனத்தினாலே அமைவதாகும். "

வி முனுசாமி உரை

Manaththu Ladhupolak Kaatti Oruvarku
Inaththula Thaakum Arivu

Couplet

Man's wisdom seems the offspring of his mind;'Tis outcome of companionship we find

Translation

Wisdom seems to come from mind But it truly flows from the kind

Explanation

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions

31

Write Your Comment