கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று — இரப்புமோ ரேஎர் உடைத்து. | குறள் எண் - 1053

Thirukkural Verse 1053

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

இரப்புமோ ரேஎர் உடைத்து.

கலைஞர் உரை

உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்

மு. வரதராசன் உரை

ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து. ('சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து. இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.

Karappilaa Nenjin Katanarivaar Munnindru

Irappumo Reer Utaiththu

Couplet

The men who nought deny, but know what's due, before their faceTo stand as suppliants affords especial grace

Translation

Request has charm form open hearts Who know the duty on their part

Explanation

There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars)

Comments (4)

Romil Bawa
Romil Bawa
romil bawa verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

Jayesh Gandhi
Jayesh Gandhi
jayesh gandhi verified

4 weeks ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

Ranbir Dube
Ranbir Dube
ranbir dube verified

4 weeks ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

Kavya Cherian
Kavya Cherian
kavya cherian verified

4 weeks ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.

Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu

Ketuka Ulakiyatri Yaan

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.