z

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். | குறள் எண் - 961

indri-amaiyaach-chirappina-aayinum-kundra-varupa-vital-961

119

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

கலைஞர் உரை

"கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்"

மு. வரதராசன் உரை

"இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்."

சாலமன் பாப்பையா உரை

"ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. (அமையாமை - இறத்தல். 'குடிப்பிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: இன்றியமையாத சிறப்புடையனவாயினும் தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக. இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது. "

Indri Amaiyaach Chirappina Aayinum
Kundra Varupa Vital

Couplet

Though linked to splendours man no otherwise may gain,Reject each act that may thine honour's clearness stain

Translation

Though needed for your life in main, From mean degrading acts refrain

Explanation

Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death

119

Write Your Comment