திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 918
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – வரைவின் மகளிர்
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
மு. வரதராசன் உரை : வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை : வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.
கலைஞர் உரை : வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Varaivinmakalir ( Wanton Women )
Tanglish :
Aayum Arivinar Allaarkku Anangenpa
Maaya Makalir Muyakku
Couplet :
As demoness who lures to ruin woman’s treacherous loveTo men devoid of wisdom’s searching power will prove
Translation :
Senseless fools are lured away By arms of sirens who lead astray
Explanation :
The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female