திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 151
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – பொறையுடைமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
மு. வரதராசன் உரை : தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்
சாலமன் பாப்பையா உரை : தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்
கலைஞர் உரை : தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Poraiyutaimai ( The Possession of Patience, Forbearance )
Tanglish :
Akazhvaaraith Thaangum Nilampolath Thammai
Ikazhvaarp Poruththal Thalai
Couplet :
As earth bears up the men who delve into her breast,To bear with scornful men of virtues is the best
Translation :
As earth bears up with diggers too To bear revilers is prime virtue
Explanation :
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues