திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1149
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
மு. வரதராசன் உரை : அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
சாலமன் பாப்பையா உரை : அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?
கலைஞர் உரை : உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Alararivuruththal ( The Announcement of the Rumour )
Tanglish :
Alarnaana Olvadho Anjalompu Endraar
Palarnaana Neeththak Katai
Couplet :
When he who said ‘Fear not!’ hath left me blamed,While many shrink, can I from rumour hide ashamed
Translation :
Who said “fear not” flared up rumour Why then should I blush this clamour?
Explanation :
When the departure of him who said “fear not” has put me to shame before others, why need I be ashamed of scandal