திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 245
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – அருளுடைமை
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
மு. வரதராசன் உரை : அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
சாலமன் பாப்பையா உரை : அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.
கலைஞர் உரை : உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Arulutaimai ( Compassion )
Tanglish :
Allal Arulaalvaarkku Illai Valivazhangum
Mallanmaa Gnaalang Kari
Couplet :
The teeming earth’s vast realm, round which the wild winds blow,Is witness, men of ‘grace’ no woeful want shall know
Translation :
The wide wind-fed world witness bears: Men of mercy meet not sorrows
Explanation :
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kindhearted
Leave a Reply