திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 49
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – இல்வாழ்க்கை
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
மு. வரதராசன் உரை : அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை : அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.
கலைஞர் உரை : பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Ilvaazhkkai ( Domestic Life )
Tanglish :
Aran Enap Pattadhe Ilvaazhkkai
Aqdhum Piranpazhippa Thillaayin Nandru
Couplet :
The life domestic rightly bears true virtue’s name;That other too, if blameless found, due praise may claim
Translation :
Home-life and virtue, are the same; Which spotless monkhood too can claim
Explanation :
The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach it