திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 46
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – இல்வாழ்க்கை
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்?
மு. வரதராசன் உரை : ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
சாலமன் பாப்பையா உரை : மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?
கலைஞர் உரை : அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Ilvaazhkkai ( Domestic Life )
Tanglish :
Araththaatrin Ilvaazhkkai Aatrin Puraththaatril
Pooip Peruva Thevan?
Couplet :
If man in active household life a virtuous soul retain,What fruit from other modes of virtue can he gain
Translation :
Who turns from righteous family To be a monk, what profits he?
Explanation :
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?