திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1153
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – பிரிவு ஆற்றாமை
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
மு. வரதராசன் உரை : அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.
சாலமன் பாப்பையா உரை : எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.
கலைஞர் உரை : பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; “பிரிந்திடேன்” என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Pirivaatraamai ( Separation unendurable )
Tanglish :
Aridharo Thetram Arivutaiyaar Kannum
Pirivo Ritaththunmai Yaan
Couplet :
To trust henceforth is hard, if ever he depart,E’en he, who knows his promise and my breaking heart
Translation :
On whom shall I lay my trust hence While parting lurks in knowing ones?
Explanation :
As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible