Aruvaai Niraindha Avirmadhikkup Pola Maruvunto Maadhar Mukaththu | அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போல அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போல | Kural No - 1117 | Thirukkural Meaning & Definition in Tamil and English

அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. | குறள் எண் – 1117

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 1117
  • பால் – காமத்துப்பால்
  • இயல் – களவியல்
  • அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.

மு. வரதராசன் உரை : குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.

சாலமன் பாப்பையா உரை : நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?

கலைஞர் உரை : தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Kaamaththuppaal ( Love )
  • Iyal : Kalaviyal ( The Pre-marital love )
  • Adikaram : Nalampunaindhuraiththal ( The Praise of her Beauty )

Tanglish :

Aruvaai Niraindha Avirmadhikkup Pola

Maruvunto Maadhar Mukaththu

Couplet :

In moon, that waxing waning shines, as sports appear,Are any spots discerned in face of maiden here

Translation :

Are there spots on the lady’s face Just as in moon that changes phase?

Explanation :

Could there be spots in the face of this maid like those in the bright full moon ?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *